தமிழக செய்திகள்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

போளூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்து மாற்றுத்திறன் குழந்தைகளை மதிப்பீடு செய்தனர்.

முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, இலவச பஸ் பயண அட்டை, பராமரிப்பு உதவித்தொகை மற்றும் சக்கர நாற்காலிகள், காதலி கருவிகள், ரொலேட்டர் ஆகியவற்றை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி வழங்கி பேசினார்.

இதில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, வட்டார கல்வி அலுவலர்கள் சுந்தர், நேரு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகன், வட்டார ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன், போளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுதா, ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்