தமிழக செய்திகள்

சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள்

சமூக ஆர்வலர்கள் சார்பில் சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தினத்தந்தி

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி அரசு வட்டார பொது ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்பட்டு கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் சிங்கம்புணரி பகுதிய சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ரூ.50 ஆயிரம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் நகரும் நாற்காலி, ஸ்ட்ரெச்சர் ஆகியவற்றை வழங்கினார்கள். இதை வட்டார ஆஸ்பத்திரியின் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் அய்யன்ராஜ் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பேராசிரியர் கண்ணன், ஆர்.எம்.எஸ்.தொழிலதிபர் சரவணன், காந்திமதி நகைமாளிகை உரிமையாளர் சிவக்குமார், திருமாறன், கண்ணையா, தினேஷ், பொன்னையா, இளையராஜா, சாமிநாதன், பாலசுப்பிரமணியன், குகன், சூரக்குடி சதாசிவம் பிள்ளை ரஞ்சிதம்மாள் குடும்பத்தினர் செந்தில்குமார், கவிதா மற்றும் மருத்துவமனை டாக்டர் சுபசங்கரி அருள்மணி நாகராஜன், மருந்தாளுனர் சேகர், நர்சுகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்