சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக அரசின் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும். இதன்படி, கண், காது உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
இதன்படி, 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறையும் பரிசோதனை நடத்த வேண்டும். இந்த மருத்துவப் பரிசோதனையில், ஒரு ஓட்டுநரின் உடல் நிலை வாகனம் ஓட்டத் தகுதியான நிலையில் இல்லை என்ற மருத்துவர் சான்று அளித்தால், அவர்களுக்கு வேறு பணி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.