தமிழக செய்திகள்

மருத்துவ காப்பீட்டு திட்ட விழா

தென்காசியில் மருத்துவ காப்பீட்டு திட்ட விழா நடந்தது.

தினத்தந்தி

தமிழக அரசு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஆகியவற்றின் இணைந்த 5-ம் ஆண்டு விழா, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா முன்னிலை வகித்தார். விழாவில் காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று குணமடைந்த பயனாளிகள் 5 பேருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை 5 பேருக்கும், பிரதம மந்திரி காப்பீடு திட்ட அட்டை 5 பேருக்கும் வழங்கப்பட்டன. மேலும் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 3 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை, மீரான் மருத்துவமனை ஆகியவற்றிற்கு நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஓவிய போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு நினைவு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலர் ஜோதிவேல், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், மீரான் ஆஸ்பத்திரி நிறுவனர் டாக்டர் அப்துல் அஜீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்