சென்னை,
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அரசு மருத்துவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்பில் எம்.சி.ஐ. மருத்துவ விதிகளா, அரசு விதிகளா என மருத்துவ மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் 3வது நீதிபதி இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
அந்த உத்தரவில், மருத்துவ கவுன்சில் விதியை பின்பற்ற வேண்டும் என்ற நீதிபதி சுப்பிரமணியனின் உத்தரவு செல்லும்.
புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்ற உத்தரவு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்கள், மலை பகுதிகள் என வரையறை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பின் முக்கிய நகல்கள் உயர் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தீர்ப்பின் முழுவிவரம் திங்கட்கிழமை பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பினால் கிராமப்புறங்களில் சேவையாற்றும் மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு சலுகை கிடையாது.