தமிழக செய்திகள்

மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

பணி நேரம் வரையறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலா ளர் லட்சுமி முன்னிலை வகித்தார். இதற்கு மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பசுகையில், மக்களை தேடி மருத்துவ பணியாளர்களின் பணி நேரத்தை வரைமுறை செய்ய வேண்டும். காலதாமதம் இன்றி ஊதியம் வழங்க வேண்டும். முதல்- அமைச்சர் அறிவித்த மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.1000 அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ராஜேஸ்வரி, பொருளாளர் அங்காள பரமேஸ்வரி, துணை தலைவர் இந்திரா ராணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்