தமிழக செய்திகள்

திறந்த வெளியில் கொட்டப்படும் மருந்து, மாத்திரைகள்

அருப்புக்கோட்டை ரெயில்வே பாலத்தின் கீழ் திறந்தவெளியில் மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை ரெயில்வே பாலத்தின் கீழ் திறந்தவெளியில் மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காலாவதியான மருந்து

அருப்புக்கோட்டை அருகே மேட்டுத்தொட்டியாங்குளம் ரயில்வே பாலத்தின் கீழ் திறந்த வெளியில் மர்மநபர்கள் காலாவதியான மருந்து, மாத்திரைகளை கொட்டி சென்றுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட மாத்திரை அட்டைகள், மருந்து பாட்டில்கள் குவிந்து காணப்படுகின்றன.

திறந்தவெளியில் இதுபோன்று காலாவதியான மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை யாரேனும் எடுத்து பயன்படுத்தினால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

அதிகாரிகள் நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

மேட்டுத்தொட்டியாங்குளம் ரயில்வே பாலத்தின் கீழ் திறந்த வெளியில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனை யாரோ கொட்டி சென்றுள்ளனர்.

விவரம் தெரியாத யாரேனும் இந்த மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். காலாவதியான மருந்து, மாத்திரைகளை அழிக்கலாம். அவ்வாறு செய்யாமல் திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளது இப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்