தமிழக செய்திகள்

மீனாட்சி - சொக்கநாதர் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா

அருப்புக்கோட்டை மீனாட்சி-சொக்கநாதர் கோவில் ஆனி பிரம் மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினத்தந்தி

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாக இந்த தலம் விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் வரும் ஜூன் 30-ந் தேதி(வெள்ளிக்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சியும், ஜூலை 1-ந் தேதி(சனிக்கிழமை) தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

கொடியேற்றத்தை முன்னிட்டு மீனாட்சி சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த கொடியேற்ற விழாவில் அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து