தமிழக செய்திகள்

மறுசீரமைப்பு பணிகளுக்காக மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் பகுதி மூடல்

மறுசீரமைப்பு பணிகளுக்காக மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினத்தந்தி

சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் பகுதி, பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது. இதனால், மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக பயணிகள் தங்களது வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலும், நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் விரிவாக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்திலும் நிறுத்த தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகன பயன்பாட்டாளர்கள் தற்காலிகமாக வாகன நிறுத்த இயலாததற்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்