தமிழக செய்திகள்

திம்ஜேப்பள்ளி ஊராட்சியில்கிராமசபை கூட்டம்

தினத்தந்தி

ராயக்கோட்டை

கெலமங்கலம் ஒன்றியம் திம்ஜேப்பள்ளி ஊராட்சி பெரிய உள்ளுகுறுக்கையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி முத்தன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்டத்தில் ஊராட்சியின் வரவு செலவுகளை வாசித்து அங்கிகரிக்கப்ட்டது, ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொது சுகாதாரம் பேணப்பட வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ..48 லட்சத்தில் நடைபெறும் திட்டப்பணிகள், தேசி ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்தலைவர் சுரேகா கோவிந்தராஜ், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் விவேகணந்தா செய்திருந்தார். முன்னதாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் ஈஸ்வரி முத்தன் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு