தமிழக செய்திகள்

வடமதுரையில் பெயிண்டர், ஓவியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

வடமதுரையில் பெயிண்டர், ஓவியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், வடமதுரையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் நிறுவன தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் கார்த்திக் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில், பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களை நலவாரியத்தில் இணைத்து அரசு சலுகைகளை பெற்று தருவது, அவர்களின் குடும்ப இன்ப, துன்ப நிகழ்ச்சிகளில் உறுப்பினர்கள் பங்கெடுப்பது, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் பெயிண்டர் மற்றும் ஓவியர்களின் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, காப்பீட்டு திட்டத்தில் இணைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.