தமிழக செய்திகள்

எம்.தொப்பம்பட்டி ஊராட்சியில் உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டம்

மொரப்பூர்:

மொரப்பூர் ஒன்றியம் எம்.தொப்பம்பட்டி ஊராட்சி ஆண்டிப்பட்டியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரிதா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி, சுகாதார மேற்பார்வையாளர் சங்கர், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், மகளிர் திட்ட வட்டார மேலாளர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சண்முகம் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய பற்றாளர் ராதிகா கலந்து கொண்டு தண்ணீர் சேமிப்பதின் அவசியம் மற்றும் தண்ணீர் சிக்கனம் குறித்தும், ஊராட்சியின் செயல்பாடுகள் குறித்தும் பேசினார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இளஞ்செழியன், குமரவேல், சஞ்சீவ்காந்தி, கல்பனா, அஞ்சுகம், சத்யா, தமிழ்தென்றல், மலர்கொடி, மகளிர் திட்ட பணியாளர்கள் மதனி, ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் நல பணியாளர் குப்புசாமி நன்றி கூறினார்.