கிருஷ்ணகிரியில், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கதிரவன் வரவேற்று பேசினார். இதில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய், பர்கூர் தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில செயலாளர் செங்குட்டுவன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சுகவனம், தீர்மானக்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பரிதாநவாப், செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சித்ரா சந்திரசேகர், அஸ்லாம், நாகராசன், பாலன், கோதண்டன், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, அன்பரசன், டாக்டர் தென்னரசு, கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார். மேலும் தேர்தல் அறிக்கையில் கொடுக்காத எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிக்கு பாடுபட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வது. பாரூர் ஏரியில் இருந்து 33 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கும் புதிய திட்டம் அறிவித்த தமிழக முதல்-அமைச்சருக்கும், நீர்வளத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து கொள்வது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.