தமிழக செய்திகள்

நாளை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

தமிழகம் முழுவதும் நாளை 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் இதுவரை 7 கட்ட தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாளை 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது 70 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக அவர் கூறினார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதாகவும், மருத்துவ குழுக்கள் மூலம் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து