தமிழக செய்திகள்

தளி அருகேவனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் உடல்கொலையா? போலீசார் விசாரணை

தினத்தந்தி

தேன்கனிக்கோட்டை:

தளி அருக உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் உடல்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே மாடக்கல் கிராமத்தில் பனை மேற்கு பீட் என்ற வனப்பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.

இதனை பார்த்த ஆடு, மாடுகளை மேய்க்க சென்றவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததனர். அதன்பேரில் வன காப்பாளர்கள் கோவிந்தராஜ், மாடக்கல் கிராம நிர்வாக அலுவலர் முருகேஷ், தளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

விசாரணை

இதையடுத்து அழுகிய நிலையில் கிடந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சார்ந்தவர்? என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாடக்கல் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்