தமிழக செய்திகள்

ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளி கைது

கிணத்துக்கடவு அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கிணத்துக்கடவு,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்துவர் 65 வயது மூதாட்டி. இவர் ஆடுமேய்த்து கொண்டிருந்த போது அங்கு வந்த வேலுச்சாமி (39) என்ற கூலித்தொழிலாளி மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

இதுகுறித்து அந்த மூதாட்டி கிணத்துக்கடவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கூலித் தொழிலாளி வேலுச்சாமியை தேடிவந்தனர்.

இந்த நிலையில் இன்று அவரை கைது செய்து போலீசார் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு