கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

வணிகர் தினம்: தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் கடையடைப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை மறுநாள் 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரை வளையங்குளம், நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள மாநாட்டு பந்தலில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற உள்ளது.

கவிஞர் வைரமுத்து மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மாநாட்டின் முதன்மை சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விழா பேருரையாற்ற உள்ளனர்.

அன்றைய தினம் தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள், மொத்த மற்றும் சில்லரை வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் வணிகர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக விடுமுறை அளித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வணிகர்கள் லட்சக்கணக்கில் குடும்பத்துடன் மதுரையில் ஒன்று கூட உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை