தமிழக செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மேஸ்திரி பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மேஸ்திரி பலியானார்.

கண்ணமங்கலம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மேஸ்திரி பலியானார்.

சந்தவாசல் அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 57). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை-வேலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். சாலவேடு கூட்ரோடு பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகனின் சைக்கிள் மீது மோதியது.

அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. ஊழியர்கள் பரிசோதனை செய்த போது முருகன் இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக சந்தவாசல் போலீசில், முருகனின் மனைவி வள்ளி (31) புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து, முருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் அதனை ஓட்டியவரையும் தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்