தமிழக செய்திகள்

மெட்ரோ ரெயில் திட்டம் நிராகரிப்பு: கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

தினத்தந்தி

கோவை,

தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது. கோவை மற்றும் மதுரை மாநகரில் போதிய எண்ணிக்கையில் மக்கள் தொகை இல்லாததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு தர மறுத்துள்ளது. இதற்கு தமிழகத்தில் அதிருப்தி கிளம்பியது. மேலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கோடு மத்திய பா.ஜனதா அரசு செயலாற்றி வருதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?