தமிழக செய்திகள்

மெட்ரோ ரெயில் பணி: புளியந்தோப்பில் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரெயில் பணியின் காரணமாக சென்னை புளியந்தோப்பு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புளியந்தோப்பு,

மெட்ரோ ரெயில் பணியின் காரணமாக சென்னை புளியந்தோப்பு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தற்போது நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணியின் காரணமாக புளியந்தோப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டு இன்று (சனிக்கிழமை) முதல் ஒரு வாரத்துக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

அதன்படி அயனாவரத்தில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை செல்ல ஸ்டாரன்ஸ் சாலை நோக்கி வரும் வாகனங்கள், ஓட்டேரி சந்திப்பில் நிறுத்தப்பட்டு குக்ஸ் சாலை, ஸ்டீபன்சன் சாலை, அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் பேரக்ஸ் கேட் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.ஸ்டாரன்ஸ் சாலை முழுவதும் ஒரு வழி பாதையாக செயல்படும். பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்து ஸ்டாரன்ஸ் சாலை வழியே வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஓட்டேரி பாலம் சந்திப்பில் இருந்து ஸ்டாரன்ஸ் சாலை வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து