தமிழக செய்திகள்

சென்னையில் நாளை காலை 7 மணிக்கு பதிலாக காலை 6 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் நாளை காலை 7 மணிக்கு பதிலாக காலை 6 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை காலை 6 மணி முதல் இயக்கப்படுகிறது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நாளை மட்டும் மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணி முதல் இயக்கப்படுகிறது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி தேர்வு) நடத்தும் தேர்வை எழுதுபவர்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது மெட்ரோ ரயில் சேவைகளை நாளை (அக்டோபர் 4ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பதிலாக காலை 6 மணி முதல் தொடங்க உள்ளது. மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முழுவதும் உச்ச நேரம் (பீக் ஹவர்ஸ்) இல்லாமல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்