தமிழக செய்திகள்

102 அடியை தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம் - விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியை தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். #MetturDam

தினத்தந்தி

மேட்டூர்,

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு கர்நாடகாவிலிருந்து வரும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டியுள்ளது.

கர்நாடகாவில் கனமழை காரணமாக, அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி போன்ற அணைகள் நிரம்பியதால் 1 லட்சத்து பத்தாயிரம் கன அடிக்கு மேல் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டிவிட்டது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது வினாடிக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 4 ஆண்டுகளுக்கு பின்னர் 102 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார். இந்நிலையில் கேஆர்எஸ் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 69 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடும் நீர் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கு விவசாயத்திற்காகவும், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தும் வருகிறது. காவிரி ஆறு மற்றும் மேட்டூர் அணை ஆகியவை தமிழகத்தில் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகித்து வருகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 102 அடியை எட்டியிருப்பது விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 107.10 அடியை எட்டியுள்ளது. அதன் நீர் இருப்பு 22.90 டிஎம்சியாக உள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாகவும், நீர் திறப்பு 1,050 கன அடியாக உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு