தமிழக செய்திகள்

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

ஆற்காடு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு ஒன்றிய செயலாளர் வளவனூர் எஸ்.அன்பழகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.ஆர்.சீனிவாசன் ஆற்காடு பழைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் அரங்கநாதன், பாலாஜி, ஹரிதாஸ், சித்ரா, ஒன்றிய கவுன்சிலர் காஞ்சனா சேகர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் ஆற்காடு மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூட்டுத்தாக்கு பஸ் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் என்.சாரதி தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் மணி, ஷங்கர், செல்வம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்ட செயலாளர் அரக்கோணம் சு.ரவி எம்.எல்.ஏ.கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் சி.ஏழுமலை மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், நிர்வாகிகள் தாமோதரன், ரவி, சுதாகர், குலசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்