தமிழக செய்திகள்

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினத்தந்தி

மானாமதுரை, 

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி இளையான்குடி தெற்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் ஆலோசனையின் பேரில் கண்ணத்தேவன்புலி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் கிருஷ்ணபிரபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கார்த்திகைசாமி, முனைவென்றி துரைசிங்கம், அழகேசன், கண்ணன், ராஜ்குமார், முத்துக்குமார், குறிச்சி ஜோதிபாசு, கீழாய்குடி சண்முகம், சரவணன், ஜெகநாதன், இளமனூர் பாண்டி, மோகன், ராஜசேகர், குமாரகுறிச்சி காரிசாமி, கருப்புசாமி மற்றும் கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சாக்கோட்டை ஒன்றியம் சார்பில் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் தலைமையில் கவுன்சிலர் தேவிமீனாள், சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பாண்டி, இளங்கோ, ரமணன், மகளிரணி ராஜம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு