தமிழக செய்திகள்

சென்னையில் எம்.ஜி.ஆர். அண்ணன் மகன் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னையில் எம்.ஜி.ஆர். அண்ணன் மகன் கொரோனாவால் உயிரிழந்து உள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகன் எம்.சி.சந்திரன் (வயது 73). இவர் சென்னை அண்ணாநகர் சாந்திகாலனி பகுதியில் வசித்து வந்தார். எம்.சி.சந்திரனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. உடனே அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து எம்.சி.சந்திரன் கடந்த 6-ந்தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் உயிரிழந்தார். இதையடுத்து பாதுகாப்பான முறையில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அவருடைய உடலை அடக்கம் செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்