தமிழக செய்திகள்

எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

 திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் மற்றும் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், திருவண்ணாமலை நகரம், வடக்கு, தெற்கு ஒன்றியம், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியம், போளூர், சேத்துப்பட்டு, செங்கம் ஆகிய இடங்களில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி அவரது உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி சார்பு அணி செயலாளர்கள், கிளை, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், இன்னாள், முன்னாள் கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு