சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது, தமிழக அரசியலில் மகத்தான வல்லமை பெற்றிருந்த எம்.ஜி.ஆரையே, ஜீரோ வாங்க வைத்த பெருமை தி.மு.க.வை சேரும் என பேசியுள்ளார்.
இதன்பின்னர் அவர், தி.மு.க.வில் உள்ள சிலர் வருமான வரித்துறைக்கு செய்தி சொல்லும் அளவுக்கு நன்றி கெட்டுள்ளது. அந்த அளவுக்கு வன்நெஞ்சம் படைத்தவர்களாக இருக்கிறார்கள் என வேதனையும் தெரிவித்துள்ளார்.
முதலில் நம்மிடம் ஒற்றுமை தேவை. மனக்கசப்பு காட்டாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ள அவர், முன்னணி தலைவர்களுக்கு உங்களது செயல் வேதனை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.