தமிழக செய்திகள்

மிக்ஜாம் புயல்: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புயல் சின்னம் வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வருவதன் காரணமாக, வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்தது.

தினத்தந்தி

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றது. மிக்ஜம் புயல், தெற்கு ஆந்திரா-வடதமிழக கடலோர மாவட்டங்களுக்கு அருகே நாளை நிலவும் என்றும், தொடர்ச்சியாக வடமேற்கு திசையில் நகர்ந்து நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே நாளை மறுநாள் தீவிர புயலாக கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயல் சின்னம் வடதமிழக கடலேர பகுதிகளை நெருங்கி வருவதன் காரணமாக, வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. நாளையும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்