தமிழக செய்திகள்

மீன்பிடி தடைக்காலத்தில் பாலை மீன் பிடித்து வணிகம் - மீன்வளத்துறைக்க்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

பாலை மீன் குஞ்சுகளை பிடித்து வணிகம் செய்வது குறித்து பரிசீலிக்க மீன்வளத்துறைக்கு மக்கள் நீதி மய்யம் அறிவுறுத்தியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மீன்பிடி தடைக்காலம் முடியும் வரை பாலை மீன் குஞ்சுகளை பிடித்து வணிகம் செய்வதை மீன்வளத்துறை நிறுத்தி வைப்பதை பரிசீலிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 91 நாள் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ஆனால், ஒரு சில இடங்களில் சோனஸ் எனும் பாலைமீன் குஞ்சுகளை மீன்வளத்துறை அனுமதியுடன் பிடித்து தனியார் பண்ணைகளுக்கு சிலர் விற்பனை செய்துவருவதாக ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது கடல்வளத்தைப் பாதிக்கும். பாலை மீனை உண்ண வரும் பெரிய மீன்களின் வரத்து குறைந்து மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தவிர, தடைக்காலம் என்பது அரசுக்கும், மீனவர்களுக்கும் பொதுவானதாகத்தான் இருக்கவேண்டும். தடைக்காலம் முடியும் வரை பாலை மீன் குஞ்சுகளைப் பிடித்து வணிகம் செய்வதை மீன்வளத்துறை நிறுத்தி வைப்பதை பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்