தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து: பால் வியாபாரி உயிரிழப்பு

தூத்துக்குடியில் பண்டாரம்பட்டி-சில்வர்புரம் சாலையில் பால் வியாபாரி ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே மாடு வந்ததால் பைக் விபத்துக்குள்ளானது.

தினத்தந்தி

தூத்துக்குடி அண்ணாநகர் 8வது தெருவைச் சேர்ந்த பூபால் மகன் சேகர் (வயது 58), பால் வியாபாரி. இவர் கடந்த 29ம் தேதி இரவு 9 மணியளவில் மீளவிட்டான் அருகே பண்டாரம்பட்டி-சில்வர்புரம் சாலையில் பைக்கில் சென்று கெண்டிருந்தார். அப்பேது சாலையின் குறுக்கே மாடு வந்ததால் பைக் விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த சேகர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு