கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

வாகன சோதனையின்போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய மில் அதிபர் கைது

வாகன சோதனை செய்தபோது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய மில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மகேந்திரன். இவர் போலீசாருடன் நேற்று முன்தினம் இரவு ஆர்.எஸ்.புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். ஆனால் காரை ஓட்டி வந்த நபர், முறையாக பதில் அளிக்க வில்லை. இதையடுத்து காரின் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கேட்டார்.

இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் காரில் இருந்து இறங்கி சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரனிடம் தகராறு செய்தார்.

பின்னர் அவர், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தாக்கினார். உடனே அங்கிருந்த மற்ற போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.

இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர் கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் வீதியை சேர்ந்த அர்பித் ஜெயின் (வயது36) என்பதும், அவர் மில் அதிபர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது