தமிழக செய்திகள்

அச்சரப்பாக்கம் அருகே மினி லாரி மோதி 5 ஆட்டோக்கள் சேதம் - 5 டிரைவர்கள் படுகாயம்

அச்சரப்பாக்கம் அருகே ஆட்டோ நிறுத்தத்தில் மினி லாரி புகுந்ததில் 5 ஆட்டோக்கள் சேதம் அடைந்தன. 5 ஆட்டோ டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலை அருகே சென்னையில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற மினி லாரி நிலை தடுமாறி ஆட்டோ நிறுத்தத்தில் புகுந்தது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 ஆட்டோக்கள் மீது மோதியது. 5 ஆட்டோக்கள் பள்ளத்தில் சாய்ந்து நொறுங்கியது. அப்போது ஆட்டோவில் அமர்ந்து இருந்த ஆட்டோ டிரைவர்கள் ஏழுமலை, கோவிந்தன், உதயசங்கர், கங்கா, ரமேஷ், ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்து ஏற்பட்ட ஆட்டோக்களின் டிரைவர்கள் கூறுகையில்:-

ஆட்டோவை நம்பி தான் எங்களுக்கு தினமும் வாழ்வாதாரம் மேலும் பள்ளி திறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வாழ்வாதாரம் எங்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது என்று குறிப்பிட்டனர். விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு