தமிழக செய்திகள்

மினி மாரத்தான் போட்டி

மினி மாரத்தான் போட்டி

குன்னூர்

குன்னூர் அருகே வெலிங்டன் கண்டோன்மென்ட்டில் விஜய் திவாஸ் மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. 'ராணுவ வீரருடன் ஓட்டம், ராணுவ வீரருக்காக ஓட்டம்' என்ற கருப்பொருளில் நடந்த மாரத்தான் போட்டி, இந்திய ராணுவத்துக்கும்-மக்களுக்கும்(குறிப்பாக இளைஞர்களுக்கும்) இடையே பிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர் கமாண்டென்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். 5 கிலோ மீட்டர் மற்றும் 12 கிலோ மீட்டர் தூரம் என இரு பிரிவுகளில் மாரத்தான் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு