விபத்தில் பலியான ஷேக்தாவூத், நிஷார்மைதீன் 
தமிழக செய்திகள்

மோட்டர் சைக்கிள் மீது மினி வேன் மோதி விபத்து - 2 பேர் பலி

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பங்களா புதுத்தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (வயது 38) கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் நிஷார் மைதீன் (வயது 37) கார் டிரைவர்.இவர்கள் 2 பேரும் நேற்று இரவு சித்தையன் கோட்டையில் இருந்து திண்டுக்கல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

திண்டுக்கல் பித்தளைப்பட்டி பிரிவு அருகே வந்தபோது எதிரே ஈரோட்டில் இருந்து செம்பட்டியை நோக்கி வந்த மினி வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

இதில் பலத்த காயமடைந்த ஷேக்தாவூத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிஷார் மைதீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தாலுகா போலீசார் விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் ஜெயவிஜயன் (38) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்