தமிழக செய்திகள்

தொழிற்சாலைகளிடம் இருந்து குறைந்தபட்ச மின் கட்டணமே வசூலிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

தொழிற்சாலைகளிடம் இருந்து குறைந்தபட்ச மின் கட்டணமே வசூலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், தென்னிந்திய ஸ்பின்னிங் மில் சங்கம் சார்பில் தாக்கல் செய்துள்ள வழக்கில், கொரோனா ஊரடங்கு காரணமாக 3 மாதங்களுக்கு மேலாக அனைத்து மில்களும் மூடப்பட்டு உள்ளது. தொழிலாளர்களும் வேலைக்கு வருவதில்லை. அனைத்து நிதி நடவடிக்கைகளும் முடங்கிப்போய் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உயர் அழுத்த மின் கட்டணத்தை முழுமையாக செலுத்தும் படி நிர்ப்பந்திக்கிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும். குறைந்த பட்ச உயர்மின் அழுத்தத்திற்கான 20 சதவீதத்தை மட்டும் கட்டணமாக வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல உயர் மின் அழுத்தம் பயன்படுத்தக்கூடிய மற்ற தொழில் நிறுவனங்கள் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகளிடம் இருந்து ஊரடங்கு முடியும் வரை குறைந்தபட்ச கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு