தமிழக செய்திகள்

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.72 உயர்வு; பிரதமருக்கு நன்றி தெரிவித்த எச்.ராஜா

நெல்லுக்கான ஆதார விலை ரூ.2,441-ஆக நிர்ணயம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதற்கு எச்.ராஜா நன்றி தெரிவித்துள்ளார்

சென்னை,

தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

வேளாண் தொழிலை பாதுகாக்கும் நோக்கிலும், விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கிலும், நெல் உற்பத்தியை தொடர்ந்து அதிகரிக்கும் வகையிலும்...

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தி, ரூ.2,441-ஆக நிர்ணயம் செய்ய பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

விவசாயிகள் அனைவரின் சார்பாகவும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுஹானுக்கும், எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.