தமிழக செய்திகள்

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளியால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்தது. இதனை தொடரந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு அவருக்கு கொரேனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா இல்லை என தெரியவந்தது. பின்னர், அவரை 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர். அதன்பேரில் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையில் எச்1என்1 வகை இன்புளூயன்சா வைரல் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவருக்கு மருத்தவர்கள் தகுந்த சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது சிகிச்சைக்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் குணமடைந்ததால் மருத்துவமனையில் இருந்து இன்று வீடுதிரும்பி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது