தமிழக செய்திகள்

டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பெற்றோரை சந்தித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆறுதல்

உயிரிழந்த டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பெற்றோரை சந்தித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆறுதல் கூறினார்.

தினத்தந்தி

தேனி,

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார்(வயது 45) இன்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டத் தொடர்ந்து, டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல் தேனி ரத்தினம் நகரில் வசிக்கும் அவரது பெற்றோர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் தேனி அணைக்கரப்பட்டியில் உள்ள டி.ஐ.ஜி. விஜயகுமாரின் வீட்டிற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் சென்றார். அங்கு விஜயகுமாரின் பெற்றோரை சந்தித்து பேசி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு