மயிலாடுதுறையில் குடியிருப்புகளில் தங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.
கனமழை
மயிலாடுதுறை பகுதியில் நற்றுமுன்தினம் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது. மயிலாடுதுறை நகரில் எம்.ஜி.ஆர். காலனி குடியிருப்பில் தேங்கி இருந்த மழை நீரை நகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த பணியை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவருடன் கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார் ஆகியோர் இருந்தனர். மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ஆண்களுக்கான உள்நோயாளி பிரிவு கட்டிடத்தின் முன்பு மழை நீர் தேங்கி நின்றது. இதனால் நோயாளிகளும், டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும் உள்ளே சென்று வர அவதிப்பட்டனர்.
கட்டுப்பாட்டு அறை
கனமழையையொட்டி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை 04364-222588 9487544588 என்ற எண்ணிலும் 8148917588 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.