தமிழக செய்திகள்

பிளஸ் 2 தேர்வு குறித்த அறிக்கையை முதல்-அமைச்சரிடம் சமர்பித்தார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

பல்வேறு தரப்பினருடன் நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு பிளஸ் 2 தேர்வு குறித்த அறிக்கையை முதல்-அமைச்சரிடம் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சமர்ப்பித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டது.

மேலும் சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரநிதிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டு அறிந்த பின்னர், இது குறித்த அறிக்கையை தயார் செய்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டானை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதன் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வு குறித்த இறுதி முடிவை முதல்-அமைச்சர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்