தமிழக செய்திகள்

சூடானில் இருந்து மீட்கப்பட்ட 9 தமிழர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்

இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 96 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஸ்தான் தகவல் தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

சூடானில் நிலவி வரும் அசாத்திய சூழலால் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டு வருகிறது. அதனடிப்படையில் சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க ''ஆபரேஷன் காவேரி'' மூலமாக மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சூடானில் இருந்து மீட்கப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்த மேலும் 9 தமிழர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். அப்போது பேசிய அவர், இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 96 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஸ்தான் தகவல் தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது