தமிழக செய்திகள்

சுகாதாரத்துறை செயலாளரை மாற்றியது போல அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் - தி.மு.க தலைவர் ஸ்டாலின்

சுகாதாரத்துறை செயலாளரை மாற்றியது போல அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரிகள் மாற்றம் உள்பட அரசின் முன்னுக்குபின் முரணான நடவடிக்கைகள் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசு துறைகள் வெளியிடும் கெரேனா புள்ளிவிவரங்களில் முரண்பாடு இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின் சுகாதாரத்துறையில் அமைச்சர்கள்- அதிகாரிகள் இடையே குழு மனப்பான்மை மற்றும் பேட்டியால் இந்த குழப்பங்கள், குளறுபடிகள் நிலவுவதாக நிபுணர்கள் கணித்துள்ளார்கள் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளரை மாற்றியது போல அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் விதத்தில் சுகாதாரத்துறையை முதலமைச்சர் தன்வசம் எடுத்து கெள்ள முன்வர வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்