தமிழக செய்திகள்

அமைச்சரை விமர்சித்த ஆளும்கட்சி எம்எல்ஏ : சட்டசபையில் சலசலப்பு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பதிலில் திருப்தியில்லை என ஆளும் கட்சி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. #TNAssembly #VijayaBaskar

தினத்தந்தி

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய பெருந்துறை சட்டமன்ற அதிமுக உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம், தங்கள் தொகுதிக்குட்பட்ட விஜயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் வசதிகள் கொண்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதேபகுதிக்கு அருகில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உள்ளதால், ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த தேவையில்லை என்றார். அதற்கு பதில் கருத்து தெரிவித்த தோப்பு வெங்கடாசலம், எப்போதும் புள்ளி விவரங்களை சட்டப்பேரவையில் பேசும் சுகாதாரத்துறை அமைச்சரின் தற்போதைய பதில் திருப்தி தரவில்லை என்றார். இதனால் அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

#TNAssembly #VijayaBaskar

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்