சென்னை,
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரான மதுசூதனன் தோல்வியுற்றார். இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றி இதுவரை ஆலோசனை மேற்கொள்ளாதது ஏன்? என கேள்வி எழுப்பி அ.தி.மு.க. அவை தலைவர் மதுசூதனன் முதல் அமைச்சர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன் இடைத்தேர்தல் தோல்விக்கு முக்கிய அமைச்சர்களே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
#RKNagar | #Madhusudhanan