சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு அக்கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். அ.தி.மு.க.வில் காணப்படும் அ.தி.மு.க. அம்மா மற்றும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா ஆகிய இரு அணிகளையும் இணைப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.