சென்னை,
கொரோனா பாதிப்பு காரணமாக டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றிய சி.பி.சி.ஐ.டி பிரிவு அலுவலக மேலாளர் சந்திரசேகர் உயிரிழந்தார்.
முன்னதாக கடந்த 17-ம் தேதி முதல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுவாசக் கோளாறு காரணமாக வென்டிலேட்டர் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.