தமிழக செய்திகள்

சாலி கிராமத்தில் சினிமா இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கார் கண்ணாடி உடைப்பு

சாலி கிராமத்தில் சினிமா இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கார் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தது தெரிந்தது.

தினத்தந்தி

பிரபல சினிமா இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. இவர், நடிகை ரோஜாவின் கணவர் ஆவார். திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் பெப்சி சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் இவரது வீடு உள்ளது.

நேற்று முன்தினம் மாலை ஆர்.கே.செல்வமணி, சாலிகிராமம், கண்ணம்மாள் தெருவில் உள்ள நண்பரை பார்க்க காரில் சென்றார். காரை சாலையோரம் நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆட்டோ டிரைவர் ஒருவர் அவரது காரின் பின்பக்க கண்ணாடி மற்றும் பக்க வாட்டில் உள்ள கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தது தெரிந்தது.

இது குறித்து ஆர்.கே.செல்வமணியின் கார் டிரைவர் பாலமுருகன் அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குடிபோதையில் கார் கண்ணாடியை உடைத்தாரா? அல்லது வேண்டும் என்றே கல்வீசி உடைத்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்