தமிழக செய்திகள்

கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் நோக்கிச் சென்ற பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சு

ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை வீசியுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்து மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்தபோது மாநகர பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை வீசியுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காத்தால் ஆத்திரம் அடைந்து மர்ம நபர்கள் பேருந்து மீது கற்களை வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வீச்சு சம்பவம் தொடர்பாக விசாரனை நடைபெற்று வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து