தமிழக செய்திகள்

வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான தகவல்கள் பரவி வருகிறது - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான தகவல்கள் பரவி வருகிறது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான தகவல்கள் பரவி வருகிறது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சில விஷமிகள் சமூகவலைதளங்களில் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிபிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT