சென்னை,
மத்திய முன்னாள் அமைச்சா மு.க.அழகிரி தனது ஆதரவாளாகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறா. தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதற்காக, ஆதரவாளாகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளா.
மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள தனியா திருமண மண்டபத்தில் மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. வரும் தேர்தலில் தனது பங்கு இருக்கும் என்று மு.க அழகிரி ஏற்கனவே கூறியிருந்த நிலையில், ஆதரவாளர்களுடனான இன்றைய ஆலோசனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.